தூத்துக்குடி: தூத்துக்குடி தெற்கு மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய கொலை வழக்குகளில் உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை ஒருங்கிணைத்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர முக்கியப் பங்காற்றிய தலைமை காவலர்கள் கி. கணபதி அம்மாள் மற்றும் R. கணேசன் ஆகியோரை, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார்.




















