தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், தொடர்புடைய குற்றவாளியைக் கைது செய்வதில் முக்கியப் பங்காற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் ச. செந்தில் ஆறுமுகம் மற்றும் தலைமைக்காவலர்கள் வெ. பாலமுருகன், சோ. காரி (எ) ராஜா ஆகியோரை, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் (18.11.2026) அன்று நேரில் அழைத்துப் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.



















