மதுரை: மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்ற நகைச்சுவை மன்றக் கூட்டத்தில், புற்றுநோயிலிருந்து மீண்ட விருதுநகரைச் சேர்ந்த நகைச்சுவை மன்ற உறுப்பினர் ஜெயலெட்சுமியின் 50-வது திருமண நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டாக்டர் சேதுராமன், டாக்டர் குரு சங்கர், நகைச்சுவை மன்றத் தலைவர் மற்றும் செயலர், பட்டிமன்ற நடுவரும் நடிகரும் பேராசிரியருமான கலைமாமணி முனைவர் கு. ஞானசம்பந்தன், அமைப்புச் செயலாளர் வி.எம். பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஜெயலெட்சுமியின் திருமண நாளை முன்னிட்டு கேக் வெட்டி, பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினர். மேலும், திரைப்பட இயக்குநரும் நடிகருமான டாக்டர் ஜெ. விக்டர், கரிசல்பட்டி சுந்தர்ராஜன், பாஸ்கர், கவிஞர் இரா. ரவி, ஆசிரியர் மோசஸ், ஒருங்கிணைப்பாளர் இஸ்மத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி


















