திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் எதிரே உள்ள டீக்கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராஜபாளையத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவர், ஒட்டன்சத்திரத்தில் தனது நண்பரைச் சந்தித்துவிட்டு, காவல் நிலையம் எதிரே உள்ள டீக்கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி டீ குடிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு நோட்டமிட்ட மர்ம நபர், இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்றுள்ளார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வாகனத்தைத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















