கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். அனிதா அவர்களின் உத்தரவின்படி, கடந்த 15 நாட்களில் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளில் எஸ்.எஸ்.எஃப். படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு 9 பேரை மீட்டுள்ளனர். இதில் காணாமல் போன 4 சிறுமிகள், 3 சிறுவர்கள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு



















