கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலகுறி கிராமம், பெல்லாரம்பள்ளி கூட்ரோடு அருகே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். இதில் விற்பனைக்காக வைத்திருந்த வெளிமாநில மதுபானங்களைப் பறிமுதல் செய்ததுடன், விற்பனையில் ஈடுபட்ட நபரையும் கைது செய்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















