கிருஷ்ணகிரி: ஓசூர் டவுன் மற்றும் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அசோக் பில்லர்–ராயக்கோட்டை சாலை, ஓசூர்–பெங்களூரு புதிய பைபாஸ் சாலை கர்னூர் பாலம் மற்றும் பூனப்பள்ளி சோதனைச்சாவடி ஆகிய மூன்று இடங்களில் வருவாய் வட்டாட்சியர் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மூன்று வாகனங்களைச் சோதனை செய்ததில், உரிய அனுமதியின்றி சுமார் 19 யூனிட் எம்-சாண்ட் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரையும் கைது செய்த அதிகாரிகள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மூன்று வாகனங்களையும் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















