திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த ராஜகுரு(35). இவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சில கைதிகளை அழைத்துக் கொண்டு திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் மதுரை மத்திய சிறையில் அடைத்துவிட்டு அடைத்து விட்டு மீண்டும் திண்டுக்கல் திரும்பும் வழியில் ஆரப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து திண்டுக்கல் மின் மயானத்தில் இறந்த காவலர் ராஜகுருவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து அவருடன் பணியாற்றிய காவலர்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் ஆயுதப்படை போலீசார் துப்பாக்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















