மதுரை: மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள வௌவால் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் நாமக்கல்லில் இருந்து கோழிகளை வாங்கி வேன் மூலம் கடைகளில் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு உலகனேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே பிரபு சென்றபோது, அங்கு வந்த 13 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், தலையில் பலத்த காயமடைந்த பிரபு, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த ஒத்தக்கடை போலீசார், 3 பேரை கைது செய்து தாக்குதலுக்கான காரணம் மற்றும் தலைமறைவாக உள்ள மற்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி


















