திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட ராச்சமங்கலம், சேவாத்தூர், நாயனசெருவு ஆகிய பகுதிகளில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் காவல்துறையினர் சிறப்பு நடை ரோந்து மேற்கொண்டனர். மேலும், பொதுமக்களுடன் நல்லுறவை மேம்படுத்தவும், குற்றத் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கிராம விழிப்புணர்வுக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.




















