மதுரை: மதுரை உசிலம்பட்டி அருகே, பத்திர பதிவு முறையை (இ) டெண்டர் மூலம் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திர எழுத்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் பத்திர பதிவு முறையை , இடெண்டர் மூலம், பத்திர பதிவிற்கான விண்ணப்பம் முதல் ஆவணங்கள் பதிவேற்றம், கையொப்பம் வரை ஆன்லைன் வாயிலாக பதிவு செய்ய அரசானை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிவு முறையால் ,
தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பத்திர எழுத்தர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என குற்றம்சாட்டி பத்திர எழுத்தர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி சார் பதிவாளர் அலுவலகம் முன்பு செல்லம்பட்டி பத்திர எழுத்தர்கள் சங்கம் சார்பில் இ டெண்டர் முறை மூலம் தனியாருக்கு தாரைவார்க்கும் இந்த நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பத்திர எழுத்தர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த நடைமுறையை பரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என்றும் ரத்து செய்யவில்லை எனில், அடுத்தடுத்த போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி















