கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து உட்கோட்டங்களையும் சேர்ந்த போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு காவலர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அன்ஷுல் நாகர் IPS அவர்கள் இன்று பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். இரவு நேரங்கள் மற்றும் குறைந்த வெளிச்சம் நிலவும் பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்கள், வாகன ஓட்டிகளுக்கு எளிதில் தென்படும் வகையில் Reflective Jackets-களும் அதிக விபத்துகள் ஏற்படக்கூடிய பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் வகையில் சாலைகளில் அமைக்கப்படும் பேரிகார்டுகளில் பொருத்துவதற்கான Reflective Rolls உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டன. போக்குவரத்துப் பணியில் ஈடுபடும் காவலர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, பொதுமக்களின் சாலைப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

















