திண்டுக்கல்: திண்டுக்கல், நொச்சி ஓடைப்பட்டி பகுதியில் கடந்த மாதம் 6-ம் தேதி மேட்டுப்பட்டியை சேர்ந்த வீரபத்திரன்(34). என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாணார்பட்டி போலீசார் ராஜசேகர்(31). தேவரூப டொனால்டோ(24). நவீன்குமார்(20). ஆரோக்கியஜெட்லி(26). லிட்டில் பிரின்ஸ்ராஜ்(26). ராஜா(45). உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவர்களின் குற்ற நடவடிக்கையை ஒடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் துர்கா அவர்கள் 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து சாணார்பட்டி போலீசார் 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா

















