மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சார்பதிவாளர் அலுவலக உதவியாளரும் பொறுப்பு சார்பதிவாளருமான திருமதி. தமிழ்ச்செல்வி மற்றும் அவரது பணியாளர்கள், பத்திரப்பதிவு செய்ய வரும் நபர்களிடம் ஆவண எழுத்தர்கள் மூலமாக லஞ்சம் வசூலிப்பதாகக் கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், ஒரு கூட்டுத் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனையின் போது, கணக்கில் காட்டப்படாத ரொக்கப் பணமாக விற்பனையாளரான பிரவீணா என்பவரிடமிருந்து ரூ.7,20,000/- வாங்குபவரான திரு. வேணுகோபால் என்பவரிடமிருந்து ரூ.16,000/- தனியார் நிறுவன ஊழியரான திரு. களஞ்சியம் என்பவரிடமிருந்து ரூ.8,000/-
மற்றும் ஆவண எழுத்தர்களின் உதவியாளர்களான ராஜேஸ்வரனிடமிருந்து ரூ.14,000/- அழகுமலையிடமிருந்து ரூ.4,000/- பொத்துராஜாவிடமிருந்து ரூ.3,000/-
என இவ்வாறாக மொத்தம் ரூ.7,65,000/- கணக்கில் காட்டப்படாத பணமானது மேற்கண்ட நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 9 ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்
















