மதுரை: மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், காய்கறிக் கழிவுகளை ஒதுக்கப்பட்ட இடத்தில் கொட்டவும், மார்க்கெட் வளாகத்தைத் தூய்மையாகப் பராமரிக்கவும் அறிவுறுத்தினார். மேலும், மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்களைச் சீரமைத்தல், தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்றுதல், தெருவிளக்குகளைப் பராமரித்தல் உள்ளிட்ட பணிகளைத் தொடர்ந்து கண்காணிக்குமாறு மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி



















