மதுரை: மாவட்டம், மேலூரில் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் ஆறு பேர், ஐந்து நாட்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட உணவைச் சாப்பிட்டதாகக் கூறப்படும் நிலையில், உடல்நலக்குறைவு ஏற்பட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் நல்ல பாண்டியம்மாள், ஆதம்மாள், செல்வி, முனியம்மா, சகுந்தலா மற்றும் அழகு மீனா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உணவு நச்சுத்தன்மை ஏற்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ள நிலையில், பாதிப்புக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு ச.மூவேந்திரன்




















