மதுரை: தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறையைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முயற்சியைக் கைவிட வலியுறுத்தி, மதுரையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் அரசு உரிமம் பெற்ற ஆவண எழுத்தாளர்கள் மற்றும் நகல் தயாரிப்பாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கவன ஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் நிறுவனங்களிடம் பத்திரப்பதிவுப் பணிகளை ஒப்படைத்தால் பொதுமக்களுக்குக் கூடுதல் கட்டணச் சுமை ஏற்படுவதுடன், சொத்து ஆவணங்களின் பாதுகாப்பும் பாதிக்கப்படலாம் என்றும், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்த கட்டமாக மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் மற்றும் முற்றுகைப் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி



















