திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூரில் மீஞ்சூர் அனைத்து வணிகர்களின் பேரமைப்பு சார்பில் பொதுமக்களுக்கான பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. மீஞ்சூர் அனைத்து வணிகர்களின் பேரமைப்பு மற்றும் மஞ்சங்கரணை வேல்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து நடத்திய முகாமில் ரத்த அழுத்த பரிசோதனை,சர்க்கரை அளவு பரிசோதனை,பிசியோதெரபி ஆலோசனை மற்றும் பொது மருத்துவ பரிசோதனைகள் சிகிச்சைகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் ஏ.சி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். கௌரவ தலைவர் ஏ.கே.சுரேஷ்,செயலாளர் அலெக்ஸாண்டர்,பொருளாளர் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமினை மீஞ்சூர் பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். அவருடன் திமுக மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் தமிழ் உதயன்,மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சக்திவேல்,மீஞ்சூர் காவல் உதவி ஆய்வாளர்கள் பாஸ்கரன்,டேவிட் பொன் குமார்,மாவட்ட திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கா.சு.தமிழ் பிரியன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி முகாமினை துவக்கி வைத்தனர். மீஞ்சூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பரிமளா அருண்குமார்,சுகன்யா வெங்கடேசன், பாஸ்கர், குமாரி, புகழேந்தி, நக்கீரன் சங்க நிர்வாகிகள் எம்.வி.தமிழரசன், அபூபக்கர், ராஜேந்திரகுமார், வேல்ராஜ். கோபால். பாபு என்ற அஜீஸ் அஹமத், கணேஷ்குமார், கதிர்வேல், ஹிந்துஸ்தான் சீனிவாசன், எம்.டி.சுதாகர்,ஷைன்சா,ஆண்ட்ரூஸ், வினோத் , நாகேந்திர குமார்,ஜி. ஸ்டாலின்,சமூக ஆர்வலர் சசிபாபு ஆகியோர் உடனிருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு















