திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தெப்பத்துபட்டி பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து வத்தலகுண்டு வன சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது அப்பகுதியில் காட்டுப்பன்றிக்கு போட்டிருந்த கன்னி வலையில் சுமார் 100kg எடை கொண்ட 14 வயதுப் பெண் கரடி சிக்கியதை பிடித்து வீட்டில் வைத்திருந்த ரெங்கப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த பெரியசாமியை கைது செய்து, கரடியை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். மேலும் பெரியசாமி இடமிருந்து வேட்டையாட பயன்படுத்திய குத்துகம்பி(ஈட்டி), வெட்டுக்கத்தி, சுருக்கு கம்பிகள், கறி வெட்டும் மரக்கட்டை, காட்டுப்பன்றி பல், காட்டுப்பன்றி எலும்பு துண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















