திண்டுக்கல்: திண்டுக்கல்லை சேர்ந்த ராஜேஷ்குமரன் இவர் மெயின் ரோடு பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார். இக்கடையில் பெண் ஒருவர் நகை வாங்குவது போல் நடித்து நூதன முறையில் 10 கிராம் தங்க செயினை திருடி சென்றதாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார், சார்பு ஆய்வாளர் பிரபாகரன், நகர் குற்றத் தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜார்ஜ், காவலர்கள் ராதா, முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் கடையில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட நத்தம் அண்ணாநகரை சேர்ந்த முத்துப்பாண்டி மனைவி தேன்மொழி(34).- ஐ கைது செய்து அவரிடமிருந்து 10 கிராம் தங்க நகையை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா


















