திண்டுக்கல்: திண்டுக்கல் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த (13). வயது சிறுமியை திண்டுக்கல் நந்தவனப்பட்டி டிரஸ்சரி காலனி, கணேஷ் நகரை சேர்ந்த சரண்(31). என்பவர் ஆசை வார்த்தைகூறி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சத்யபிரபா தலைமையிலான போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சரணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரண் திண்டுக்கல் பழைய கரூர் ரோடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா


















