மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுடன் பயணம் செய்யும் உதவியாளர்களுக்கும் இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















