கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரிசல்நத்தம் கிராமத்தில், குமரேசன் என்பவரது வீட்டின் அருகே சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சோதனை மேற்கொண்ட போலீசார் மதுபானங்களைப் பறிமுதல் செய்து, விற்பனையில் ஈடுபட்ட நபரைக் கைது செய்தனர். பின்னர், அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு



















