கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேடரப்பள்ளி ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த ஆதித்யா என்பவர், பிளிப்கார்ட் நிறுவனத்தில் பகுதி நேரமாக டெலிவரி ஊழியராகப் பணிபுரிந்து வருவதாகவும், இந்நிலையில், கடந்த (17.10.2026) ஆம் தேதி காலை சுமார் 10.30 மணியளவில், சிப்காட் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பேரடப்பள்ளி கண்ணையன் பேக்கரி அருகே உள்ள முருகன் மோகன் ஹோட்டல் முன்பு ஆதித்யா நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னால் வந்த குற்றவாளி அவரது ₹65,000 /- ரூபாய் மதிப்புள்ள செல்போனைப் பறித்துக்கொண்டு சென்றதாகவும்,
உடனடியாக, ஆதித்யா அவரது நண்பர்களின் உதவியுடன் குற்றவாளியை பிடித்து வைத்துக்கொண்டு, சிப்காட் காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் அளித்ததின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குற்றவாளியை கைது செய்து, பின்னர் ஆதித்யா சிப்காட் காவல் நிலையம் சென்று கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்ட குற்றவாளியிடமிருந்து செல்போனைப் பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















