கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் உட்கோட்டம், பாகலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பேரண்டப்பள்ளி – தேவனஹள்ளி STRR ரோடு, தமிழக எல்லையில் வருவாய் ஆய்வாளர் அவர்கள் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர், வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சட்டவிரோதமாக அனுமதியின்றி கடத்தப்பட்ட சுமார் 12 யூனிட் M- Sand இருந்தது. அனுமதியின்றி M- Sand கடத்திய நான்கு குற்றவாளிகளை கைது செய்து M- Sand கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















