சிவகங்கை: காரைக்குடியில் பீம் இந்தியா பவுண்டேஷன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் ‘அம்பேத்கர் அறிவுக்களம் Bhimfest ’26’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம், மாறுவேடம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 600 பேர் பங்கேற்றனர். அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பொறுப்பு) ஜெ. ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர். அம்பேத்கர் வேடமணிந்த 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ராம்வாக் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், பீம் இந்தியா பவுண்டேஷனின் மாத இதழான ‘Bhim Voice’ வெளியிடப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















