சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் , மாநகராட்சி அலுவலகம் அருகில் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் , கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பெருமகனார் கே ஆர். பெரியகருப்பன் அவர்களின் வழிகாட்டுதல்படி முன்னாள் அமைச்சர், மாநில இலக்கிய அணி தலைவருமான மு.தென்னவன் அவர்களின் தலைமையில் காரைக்குடி மாநகர மேயர், மாநகர் கழக செயலளர் நா. குணசேகரன் அவர்களின் முன்னிலையில்,மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் எஸ்.எஸ்.எ. வல்லபாய் அவர்களின் ஆலோசனைப்படி , மாவட்ட சுற்றுசூழல் அணி துணை அமைப்பாளர் ஆர். சாய் சுரேஷ் ஏற்பாட்டில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அசைவ பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக அணி தலைவர் ருக்மா சரவணன், மாவட்ட கழக நிர்வாகிகள், நகர் கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், கழக மூத்த முன்னோடிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி



















