திருவண்ணாமலை: இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பேரூர் அண்ணா பூங்கா அருகே வாக்குரிமை பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டச் செயலாளர் இரா. ரவிதாசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். வீரபத்திரன் சிறப்புரையாற்றினார். நகரச் செயலாளர் பி. கிருஷ்ணமூர்த்தி உறுதிமொழியை வாசித்தார். இதில் 5 பெண் தொழிலாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலையில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. க.முத்து
















