திண்டுக்கல்: காவல்துறை அனுமதியின்றி கூட்டம் கூடியது, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தது, பொது இடங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவு செய்தது, அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 300 பேர் மீது நான்கு தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், சூர்யா உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு முதல் தகவல் அறிக்கைகள் (FIR) தனித்தனியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு எப்.ஐ.ஆரிலும் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ஒரு எப்.ஐ.ஆரில் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்குகள் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி



















