திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்பென்சர் காம்பவுண்ட் பகுதியில், வீட்டில் தனியாக இருந்த மீனாட்சி (90) என்ற மூதாட்டி, கார்த்திகை தீபம் ஏற்றியபோது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார், சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்றனர். பின்னர், உயிரிழந்த மூதாட்டியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















