திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின்பேரில், டி.எஸ்.பி. கார்த்திகேயன் மேற்பார்வையில், ஒட்டன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கபிலரசு (19). மற்றும் இரண்டு சிறார்கள் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















