திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆண்டார் குப்பத்தில் பொன்னேரியின் அடையாளங்களாக இருக்கக்கூடிய வழிபாட்டு ஆலயங்கள்,பிரசித்தி பெற்ற ஸ்தலங்கள் மற்றும் பாரம்பரியமிக்க நினைவு சின்னங்கள் குறித்து வரலாற்று புத்தகமும் பாடலும் அடங்கிய இசைத்தொகுப்பு வெளியிடப்பட்டது. அனைவருக்கும் பொதுவான விநாயகர் பாடல், பழவேற்காடு அன்னை காளிகாம்பாள் ஆலயம், பெரவள்ளூர் ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமி ஆலயம், வள்ளலார் சரணாலயம், வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயம், பொன்னேரி ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம், குமரஞ்சேரி ஸ்ரீ முருகப் பெருமான் ஆலயம், பகவான் புத்த பிரானுக்கான பாடல்,ஆலாடு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆலயம், அனைவருக்கும் பொதுவான எல்லையம்மன் பாடல், பொன்னேரி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்,அன்னை வசந்தம் கல்வியியல் சமூக நல அறக்கட்டளை, மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி ஆலயம், பழவேற்காடு புனித மகிமை மாதா திருத்தலம் மற்றும் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் இஸ்லாமிய பாடல் என 15 பாடல்கள் அடங்கிய இசை தட்டும் பாடல் புத்தகமும் வெளியிடப்பட்டது. பழவை.து.முத்து பாடல்களை எழுதி பாடியிருந்தார் . சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரியன் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட அப்பகுதியின் ஆலய நிர்வாகிகள் அதனைப் பெற்றுக் கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















