திண்டுக்கல்: கூம்பூர் கிராமப்புற பகுதிகளில் காவல் நிலைய ஆய்வாளர் கணேசமூர்த்தி, சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் இணைந்து பொதுமக்களிடையே போதையில்லா கிராமம் (Drug Free Village) திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்த போலீசார், தங்களது கிராமங்களை போதையில்லா கிராமங்களாக மாற்ற காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும், கிராமப் பகுதிகளில் சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















