திண்டுக்கல்: பழனி இரயில் நிலையத்தில் இரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இரண்டு வாலிபர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இஜாஜுல் ஹக் (21). அமீர் உசேன் (19). என்பதும், விற்பனைக்காக 2 தட்கல் இரயில் டிக்கெட்டுகளை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 2 தட்கல் டிக்கெட்டுகள், பூர்த்தி செய்யப்படாத 2 இரயில் முன்பதிவு விண்ணப்பங்கள் மற்றும் 2 செல்போன்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், இருவரும் நீண்ட நாட்களாக தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















