திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே நெய்க்காரப்பட்டி பகுதியில் அனுமதி பெற்று கனிமவளங்கள் எடுத்துச் செல்லப்படுவது குறித்து பழனி கோட்டாட்சியர் பிரியங்கா தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது வட்டாட்சியர் சஞ்சய் காந்தி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனிருந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற குவாரிகள் தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















