திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் சிறுமலை பகுதியில் குற்றத்தடுப்பு நடவடிக்கைக்காக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடமான்குளம் அருகே ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.இதையடுத்து அங்கு சென்று அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கரூர் ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த சோலைராஜ் (வயது 39). அரவக்குறிச்சியை சேர்ந்த தாமோதரன் (44),மோகன்ராஜ் (45). பிரபாகரன் (43).காமராஜ் (45).திருச்சி லால்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் (51). திருப்பூரைச் சேர்ந்த வீர தனசேகரன் (46). ரமேஷ் (35), தாராபுரத்தைச் சேர்ந்த புவனேஸ்வரன் (50).வேடசந்தூரைசேர்ந்த வேல்முருகன் (41). சுரேஷ்குமார் (38),ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த சந்தானம் (29).என்பதும், பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 12 பேரையும் போலீசார் கைது செய்தனர் மேலும் அவர்களிடமிருந்து சீட்டு கட்டு மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















