சிவகங்கை: திருமாஞ்சோலையில் சிவகங்கை மாவட்ட அளவில் ரோலர் ஸ்கேட்டிங் பிடரேசன் ஆஃப் இந்தியா மற்றும் தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேசன் இணைந்து நடத்திய ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் 13 முதல் (15). வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் ஏறத்தாழ 130 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் நம் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவன் க. சாந்த சீலன் முதலிடம் பெற்று இரண்டு தங்கப்பதக்கமும், ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்று மாநில அளவிலான போட்டிக்கு த்தகுதி பெற்றுள்ளார்.வெற்றி பெற்ற மாணவரை பள்ளி முதல்வர் ஹேமமாலினி சுவாமிநாதன் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















