சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கே.எம்.சி. மருத்துவமனை மற்றும் திருச்சி கியூரிஸ் மருத்துவமனை இணைந்து நடத்திய மெகா மார்பக நோய் மற்றும் மகப்பேறு மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. முகாமை கே.எம்.சி. மருத்துவமனை தலைமை மருத்துவர் காமாட்சி சந்திரன் தொடங்கி வைத்தார். திருச்சி கியூரிஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சுதா பாலாஜி, விஸ்வநாதன், விஜயமூர்த்தி உள்ளிட்டோர் பரிசோதனைகள் மேற்கொண்டு, நோயின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர். இம்முகாமில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமிற்கான ஏற்பாடுகளை திருச்சி கியூரிஸ் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர்கள் தனவேந்தன், திருச்செல்வம், பாலமுரளி ஆகியோர் செய்திருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















