மதுரை: மதுரை வெள்ளக்கல் குப்பைக் கிடங்கிற்குச் செல்லும் சாலையில் குப்பைகளைக் கொட்டிச் செல்வதாகக் கூறி, 50-க்கும் மேற்பட்ட குப்பை வாகனங்களைச் சிறைப்பிடித்து அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். தகவலறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சாலையில் கொட்டப்பட்ட குப்பைகள் உடனடியாக அகற்றப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இது குறித்து மாநகராட்சி ஆணையர் கௌரவ் குமார், சாலையில் குப்பைகளைக் கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குப்பைகள் அனைத்தும் கிடங்கிற்குள் கொண்டு செல்லப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி



















