மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சிப் பொறியாளர் முத்துக்குமார் மற்றும் அவரது ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள், பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாகக் கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், (23.10.2026) அன்று கூட்டு திடீர் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையின்போது, அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.23,410 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஜி-பே (G-Pay) பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ததில், அதன் மூலம் ரூ.7,25,800 லஞ்சமாகப் பெற்றிருப்பது தெரியவந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்


















