மதுரை: தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுத காவல் படையினரின் நலன் மற்றும் மறுவாழ்வு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. முதன்மை செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் தர்மராஜ், மதுரை மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், செய்தியாளர்கள் சந்திப்பில் அவர்கள் கூறும்போது,
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படுவதுபோன்று, அனைத்து சலுகைகளும் முன்னாள் ஆயுத காவல் படை வீரர்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய ஆயுத காவல் கடை வீரர்களின் குழந்தைகளுக்கு அனைத்து பள்ளிகள், கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து உயர் கல்வி படிப்புகளிலும் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட தமிழக அரசு வேலை வாய்ப்புகளில் முன்னாள் வீரர்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் முன்னாள் மத்திய ஆயுத காவல் படை வீரர்களின் நலனுக்காக தனி நல வாரியம் அமைத்து, அதற்கென தனி அமைச்சர் நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, இந்திய – திபெத் எல்லைக் காவல்படை உள்ளிட்ட துணை ராணுவப்படைகளில் பணியாற்றிய முன்னாள் வீரர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















