திண்டுக்கல்: பழனியில் நாளை நடைபெற உள்ள தீபக் கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு, பழனி மலைக்கோவில் மற்றும் அடிவாரப் பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் அதிரடி நடை ரோந்து (Foot Patrol) மேற்கொண்டனர்.
பழனி அடிவாரம், மலைக்கோவிலுக்குச் செல்லும் வழிகள் மற்றும் பக்தர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீசார் நடை ரோந்து சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். மேலும், திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, முக்கியப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















