திண்டுக்கல்: திண்டுக்கல் கொடைக்கானல் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, போர்வெல் அமைப்பதற்கான அனுமதி வழங்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் அலுவலக உதவியாளர்கள் இருவரையும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















