திண்டுக்கல்: நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த (14). வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக, நிலக்கோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த அக்னிபாத் பயிற்சி வீரர் உதயகுமார் (21). மீது கடந்த மே மாதம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவானார். இது குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்பேரில், நிலக்கோட்டை டிஎஸ்பி இளஞ்செழியன் தலைமையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொழில்நுட்ப உதவியுடன் தேடுதல் நடத்திய போலீசார், ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்த உதயகுமாரை கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















