மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மீன் மொத்த வியாபார சந்தை பகுதியில் வியாபாரிகள் மற்றும் சிறு தொழில் மீன்கள் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் கோரிக்கை என்னவென்றால். மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் போதிய வசதிகள் இல்லை பாத்ரூம் வசதிகள் இல்லை மீன் சுத்தம் செய்பவர்கள் மின்சார விளக்கு வசதி செய்து தர கேட்டிருந்தோம் ஆனால் செய்யவில்லை என்று தெரிவித்தனர். மேலும் மீன் சுத்தம் செய்யும் பகுதி குப்பை கிடங்காகவும் பாத்ரூம் வசதி இல்லாததால் அனைவரும் அந்தப் பகுதியை அசுத்தம் செய்வதாகவும் புகார் தெரிவித்துள்ளார்கள்.
குத்தகைக்காரர்கள் தினசரி 50 ரூபாய் வசூல் செய்கிறார்கள்.
ஆனால் போதிய வசதிகள் செய்து தராமல் அந்தப் பகுதியை குப்பை குளம் ஆகவும் துர்நாற்றமாகவும் அசுத்தமாகவும் இருப்பதாக புகார் தெரிவித்தனர். சிறு தொழில் புரியும் மீன் சுத்தம் செய்யும் அவர்களுக்கு ஒரு மின்சார விளக்கு எரியும் அளவிற்கான வசதியும் செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர் அதுபோலவே பாத்ரூம் வசதியும் செய்து தர வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க போலீஸ் news plus சார்பாக கிட்டுக்கொள்கிறோம்.




















