மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா பல்வேறு பகுதிகளில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். வாலாந்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் விவசாயிகளுக்கு பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்குவது குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து உசிலம்பட்டி கண்மாய், மேக்கிலார்பட்டியில் அமைக்கப்பட்ட தார்ச்சாலை மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடிநீர், சுகாதாரம், சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















