திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் (18.11.2026) ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பதிவேடுகள், ஆவணங்கள் மற்றும் முக்கிய கோப்புகளைப் பார்வையிட்டு, அவற்றை முறையாகப் பராமரிக்க அறிவுறுத்தினார். மேலும், காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் கனிவாகவும், மரியாதையுடனும் நடந்து கொண்டு, அவர்களின் புகார்கள் மீது பாரபட்சமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நேர்மை மற்றும் பொறுப்புணர்வுடன் பணியாற்றி காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேம்படுத்த வேண்டும் என்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.



















