கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருக்கன் சாவடி, உண்டிகான் கொட்டாய் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது விற்பனைக்காக மதுபானங்களை வைத்திருந்த ஒருவரை கைது செய்து, மதுபானங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு



















