கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனக் காப்புக் காட்டில் கடந்த (28.08.2020) அன்று துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பான வழக்கில், தேன்கனிக்கோட்டை உதவி அமர்வு நீதிமன்றம் (17.11.2026) தீர்ப்பளித்தது. உரிமம் இன்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றத்திற்காக இரண்டு எதிரிகளுக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.2,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.



















