சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக குற்ற எண் 61/2026 மற்றும் 133/2026 ஆகியவற்றின் கீழ் NDPS Act பிரிவுகளான 8(c) r/w 20(b)(ii)(b), 29(1) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, புதுக்கோட்டை மாவட்ட EC நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்குகளில் தொடர்புடைய எதிரிகளான ராஜேஷ் @ பூமிநாதன் மற்றும் கார்த்தி @ கார்த்திகேயன் ஆகிய இருவருக்கும் (17.11.2026) புதுக்கோட்டை EC நீதிமன்ற நீதித்துறை நடுவரால் தலா 8 மாதங்கள் சிறைத் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
கஞ்சா விற்பனை மற்றும் போதைப்பொருள் குற்றங்களைத் தடுக்கும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டு, இவ்வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்த திருப்பத்தூர் நகர் காவல் நிலைய காவல்துறையினரையும், வழக்கின் விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் சிறப்பாகப் பணியாற்றிய காவல்துறையினரையும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா, IPS அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.



















